ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது – சென்னை ஐகோர்ட்

129

பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ விண்ணப்பித்தார். ஆனால், பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி ம.தி.மு.க. விண்ணப்பித்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை.

அத­னை­ய­டுத்து தனக்கு பம்­பரம் சின்னம் ஒதுக்க கோரி மதி­முக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு­ தாக்கல் செய்­யப்­பட்­டது. சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குறைந்தது 2 தொகுதியில் போட்டியிடாததால் பம்பர சின்னத்தை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்கிறோம். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது என்று கூறிய சென்னை ஐகோர்ட்டு ம.தி.மு.க. தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.