லீசுக்கு இருந்த வீட்டை கிரையம் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது

150

லீசிற்கு வசித்து வந்த வீட்டை உரிமையாள­ரி­டமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறி ரூ 85 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை, தி.நகர், அபி­புல்லா ரோடு, வின்ட்ஸ் கோர்ட் அப்­பார்ட்மென்ட்டில் உள்ள வீட்டை அண்ணாதுரை (58) என்பவர் லீசுக்கு எடுத்து வசித்து வந்தார். அவ­ரிடம் மாரியப்பன் (32), அவரது மனைவி நாகராணி (32) ஆகியோர் அந்த வீட்டை வீட்டின் உரிமையாளரான ரமேஷ் என்பவரிடமிருந்து கிரையம் பெற்று தருவதாக கூறியுள்­ளனர். அதை நம்பி அண்ணாதுரை தனது வங்கி கணக்கில் இருந்த தொகை ரூ. 26,59,500- மற்றும் தனது மகள் வங்கி கணக்கில் உள்ள தொகை ரூபாய் 9,10,800-, தனது மருமகனின் வங்கி கணக்கில் இருந்த தொகை ரூபாய் 3,60,000- ஆக மொத்தம் ரூபாய் 39,30,300 பணத்தை மாரியப்பனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கடன் பெற்று ரூபாய் 10 லட்சம் ரொக்­க-த்தை மாரியப்பன் மற்றும் நாகராணி ஆகியோரிடம் அண்­ணா­துரை கொடுத்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து பணத்தை வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவரிடம் கொடுத்து விட்டதாக ஒரு பத்திரத்தை காட்டி நாடகமாடி மாரியப்­பன், அண்­ணா­து­ரையை நம்­ப வைத்­துள்ளார். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது பத்திரத்தில் உள்ளது தனது கையொப்பம் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் மாரியப்பன், அவரது மனைவி நாகராணி மற்றும் மாரியப்பனின் தம்பி தினேஷ் ஆகியோர் இணைந்து அண்ணாதுரையிடம் AIRTEL MUTUAL FUND ல் முதலீடு செய்தால் மாதம் 2 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி அண்ணாதுரையும் ரூபாய் 35 லட்சம் பணத்தை முதலீடு செய்ததாகவும், மொத்தமாக ரூ. 85 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி வந்துள்­ளார்.

மாரியப்பனிடம் பணத்தை திரும்ப தரும்படி கேட்க சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார். அது குறித்து அண்­ணா­­துரை போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்­தோ­ரிடம் புகார் மனு அளித்­தார்.

­­க­மி­­ஷனர் உத்­­த­ரவின் பேரில் மத்திய குற்றபிரிவு காவல் கூடுதல் ஆணையாளர் டாக்டர் பி.கே. செந்தில் குமாரி மேற்பார்வையில். மத்திய குற்றப்பிரிவு-2 காவல் துணை ஆணையாளர் நிஷா கண்காணிப்பில், கூடு­தல் ஆணையாளர் முத்துவேல் பாண்டி நேரடி கண்காணிப்பில். மத்திய குற்றப்பிரிவு, EDF-I, காவல் உதவி ஆணையாளர் ஜான்விக்டர் தலைமையிலான காவல் குழுவினர், மேற்படி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மாரியப்பன் என்பவரை நேற்று (26.03.2024) கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்த­னர்.