அம்­பத்தூர் ரயில் நிலையம் அரு­கே 18 கிலோ கஞ்­சா­வுடன் இருவர் கைது: அம்­பத்தூர் மது­வி­லக்கு அம­லாக்­கப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

247

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீ­சா­ருக்கு கிடைத்­த ரகசிய தக­வலின் பேரில் அம்பத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கண்காணித்தனர். அப்­போது அங்கு பையுடன் நின்­றி­ருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்­தினர். சந்தேகத்தின் பேரில் பையை சோதனை செய்தபோது அதில் சுமார் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்­­சா­வை கடத்­திய கோவ­ளத்தைச் சேர்ந்த காளஷா மஸ்தான் (25) காஞ்­சி­­புரம் பரத்குமார் (23) இரு­வ­ரையும் கைது செய்­த­னர். ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்­சாவை வாங்கி வந்து, அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. விசார­ணைக்­குப் பின்னர் இரு­வ­ரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்ப­டுத்­தப்­பட்­ட­னர்.