தங்கர் பச்சானின் அழகி படத்தின் நடித்தவரான அருள் மணி, தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யாவின் வேல் படத்தில் வில்லனாகவும் நடித்த அருள் மணி, அதிமுகவின் பேச்சாளராகவும் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தச் சூழலில், வழக்கமான பிரசார பணிகளை முடித்து வந்து, சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அன்னாரின் உடல் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருக்கிறது