தூத்­­துக்­கு­டியில் கொலை, கஞ்சா குற்­ற­வா­ளிகள் இருவர் மீது குண்டாஸ்: எஸ்பி பாலாஜி சர­வணன் நட­வ­டிக்­கை

159

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேர் இன்று (12.04.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி நடவடிக்கை மேற்­கொண்­டுள்­ளார்.

கடந்த 13.03.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பாலம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் செய்துங்கநல்லூர் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேச்சி மகன் பொன்இசக்கி (எ) நரி (23) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பொன்இசக்கி (எ) நரி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை கடந்த 13.03.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்கோட்டை தேரி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் புதுக்கோட்டை தெய்வச்செயல்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் பேச்சிமுத்து (19) என்பவரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 6 கிலோ 500 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் எதிரியான பேச்சிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் அவர்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்­கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி செய்துங்கநல்லூர் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த பேச்சி மகன் 1) பொன்இசக்கி (எ) நரி மற்றும் புதுக்கோட்டை தெய்வச்செயல்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகன் 2) பேச்சிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 2 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.