குதிரையேற்ற போட்டியின் 3வது நாளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர்ஜிவால் பதக்கம் வழங்கி பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, இளைஞர்கள் மத்தியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து “முதலாவது சென்னை பெருநகர காவல் குதிரையேற்ற போட்டி-2024” (First Greater Chennai Police Equestrian Championship-2024) 20.02.2024 முதல் 22.02.2024 வரை 3 நாட்கள் சென்னை, புதுப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.