அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய எஸ்பி பாலாஜி சரவணன்

181

2023ம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் மற்றும் அமைச்சுபணியாளர்களின் வாரிசுகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூபாய் 13,000- முதல் ரூபாய் 4,000- வரையிலும், அதே போன்று பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களுக்கு ரூபாய் 15,000- முதல் ரூபாய் 5,000- வரையிலும் கல்வி பரிசு தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் 10 இடங்களை பிடித்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களின் வாரிசுகளுக்கான கல்வி பரிசுத் தொகையை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் இன்று வழங்கினார். இந்தக் கல்வி பரிசுத்தொகை 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலைமை காவலர் சேதுராஜன் மகள் விஜிதா, முதல் நிலை காவலர் முத்துராமலிங்கம் மகள் முனியதர்ஷினி, தலைமைக் காவலர் குமார் மகள் காவியா, சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மகள் வர்ஷினி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மகள் சுபிக்ஷா, தலைமைக் காவலர் பிரின்ஸ் பர்னபாஸ் மகன் அம்சன் மேத்யூ, அமைச்சுப்பணி தட்டச்சர் திருமதி. கார்த்திகா மகன் ஒளிமுத்து பிரகாஷ்,
தலைமைக் காவலர் முனியசாமி மகள் நந்திகா ஸ்ரீ, தலைமை காவலர்  மாரிக்குமார் மகள் சரண்யா, தகவல் பதிவு உதவியாளர் சந்திரமதி மகன் அனுஷ் ஆகிய 10 பேருக்கும் எஸ்ப வழங்கினார்.

அதே போன்று பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலைமை காவலர் நிறைகுளத்தான் மகள் இலக்கியா, சிறப்பு உதவி ஆய்வாளர் மார்த்தாண்ட பூபதி மகள் அபிநயா, தலைமைக் காவலர் காமராஜ் மகள் சிவரசிகா, தலைமைக் காவலர் பிரபு மகன் ஜெமில்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மகன் கண்ணன், தலைமைக் காவலர் சுடலைமுத்து மகள் சிநேகா, வரவேற்பாளர் சுமதி மகன் திரு. முத்துச்செல்வம், தலைமைக் காவலர் பாலமுருகன் மகன் முகேஷ்குமார், முதல்நிலை காவலர் சித்ராதேவி மகள் ஆர்த்தி கனிமொழி, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராக்கு மகன் பிரவின்ராஜா ஆகியோருக்கு கல்வி பரிசுத்தொகையை இன்று (18.01.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து எஸ்பி வழங்கினார். மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க பாலாஜி சரவணன் வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது துாத்துக்குடி தலைமையிடத்து ஏடிஏஸ்பி கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.