ஒரே வாரத்தில் 12 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

135

சென்னை நகரில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குற்றங்களை குறைக்கும் நோக்கில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை (17.01.2024) வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 21 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 2 குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 2 குற்றவாளிகள் என மொத்தம் 34 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களில் 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்து கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.