தூத்துக்குடியில் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

151

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போன ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போகும் செல்போன் குறித்து வரும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதனையடுத்து செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களிடம் ஏற்கனவே மொத்தம் 775 செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்படையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்களை கண்டு பிடித்து, அவற்றை பறிமுதல் செய்து இன்று (18.01.2024) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் ஒப்படைத்தார். இதுவரை ரூபாய் 94,50,000- மதிப்புள்ள 875 காணாமல் போன செல்போன்களை தொழில்நுட்ப ரீதியாக கண்டுபிடித்த சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிக்கிருஷ்ணன், ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் உள்ளிட்டோரை எஸ்பி பாராட்டினார்.