தென்காசி மாவட்டத்தில், புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
தமிழக காவல்துறை தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தென்காசி மாவட்ட காவல்துறையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் முன்னிலையில் சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புளியங்குடி உட்கோட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வழக்குகளை விரைந்து முடிக்க ஐஜி கண்ணன் அறிவுரை வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஐஜி கண்ணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இறுதியாக சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக மரக்கன்று நட்டு வைத்தார்.