சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O Water) வசதியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல், வேப்பேரி, காவல் ஆணையரக வளாகத்தில் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பெயரில் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் இதர பணிகளுக்காக வரும் பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வசதி (RO Water Plant) அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1500 LPH திறன் கொண்ட RO (Reverse Osmosis) பிளான்ட் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.1,69,300/-செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று (06.03.2024) மதியம் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் அலுவலக வளாகத்தில் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (R.O Water) வழங்கும் வசதியை துவக்கி வைத்தார். இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது ஆணையரகத்தில் உள்ள 8 தளங்களில் பணியாற்றும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மற்றும் இதர பணிகளுக்காக வரும் பொதுமக்கள் பயன்பெறும் விதம் தனிப்பட்ட குழாய்கள் மூலம் Hot & Cold டிஸ்பென்சர் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி சரத்கர், இணைக்கமிஷனர் கயல்விழி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.