5,050 பெண் போலீசார் மூலம் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நிகழ்த்திய உலக சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெண்கள் தினத்தை முன்னிட்டு, 5,050 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உலக சாதனைக்கான பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
சென்னை நகரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகப்படுத்திய “காவல் உதவி செயலி” மற்றும் ’’அவள்’’ (AVAL – Avoid Violence through Awareness and Learning) திட்டம் மூலம் பெண்களுக்கு அளிக்கப்படும் தற்காப்பு பயிற்சி, சைபர் குற்ற விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை நகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் 08.03.2024 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பு குறித்து அனைவரும் அறியும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உலக சாதனை மேற்கொள்ளவும், உதவி மைய எண்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு திட்டங்களை, சென்னை பெருநகர காவலில் உள்ள 5,767 பெண் காவலர்களை (பெண் காவல் ஆளிநர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்கள் வரை) கொண்டு வடிவமைக்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்பேரில், கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (06.02.2024) மாலை, எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை பெருநகர காவல், பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கொண்டு பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் 5,050 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், பெண்கள் உதவி மைய எண்கள், 1091, 181, குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய எண்களின் வடிவத்திலும், நிர்பயா பெண்கள் பாதுகாப்பு திட்டமான AVAL மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றின் எழுத்துக்கள் வடிவிலும் நின்று பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு வடிவமைப்பை உருவாக்கி அசத்தினர். ஒரே நேரத்தில் 5,050 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஒன்றுகூடி விழிப்புணர்வு வடிவத்தை மேற்கொண்ட இந்நிகழ்ச்சியை World Record Union அமைப்பு உலக சாதனையாக அறிவித்து, இந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா அவர்கள் உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழை கமிஷனரிடம் வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய டிஜிபி சீமா அகர்வால், கூடுதல் காவல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு), சுதாகர் (போக்குவரத்து), அஸ்ரா கார்க் (வடக்கு), செந்தில்குகு) (மத்திய குற்றப்பிரிவு), காவல் இணை ஆணையாளர்கள் அபிஷேக் தீக்சித் (வடக்கு), விஜயகுமார், (மேற்கு), சிபிசக்ரவர்த்தி (தெற்கு), தேவராணி, மகேஷ்குமார், கயல்விழி, (தலைமையிடம்), காவல் துணை ஆணையாளர்கள் ஷ்ரேயா குப்தா, (பூக்கடை), உமையாள் (கோயம்பேடு), நிஷா, (மத்திய குற்றப்பிரிவு), கீதாஞ்சலி, (சைபர் கிரைம்), வனிதா (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்டனர்.