2024ம் ஆண்­டு­ காவல்­துறை துப்­பாக்கி சுடும் போட்­டி: ­­வெங்­க­லத்தை வென்ற கூடுதல் கமி­ஷனர் ஆர். சுதாகர்

197

தமி­ழக காவல்­து­றையில் நடந்த 2024ம் ஆண்­டிற்­கான மாநில அள­வி­லான துப்­பாக்கி சுடும் போட்­டியில் சென்னை நகர போக்­கு­வ­ரத்து காவல் கூடுதல் கமி­ஷனர் ஆர். சுதாகர் வெங்­க­லம் வென்­றார்.

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கான 2024-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்­னையில் நடந்­தது. கடந்த 15.07.2024 முதல் 07.08.2024 வரை நான்கு காவல் மண்டலங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டன. தகுதிச் சுற்றில் மொத்தம் 207 காவல் அதிகாரிகள் பங்கேற்றதில் 63 அதிகாரிகள் இறுதிப் போட்டிகளுக்கு மூன்று பிரிவாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதிப் போட்டிகள் கடந்த 19ம் தேதியும் நேற்றும் சென்னையில் உள்ள மருதம் வளா­கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியின் துப்பாக்கி சுடும் தளத்தில் நடந்­த­து.

19ம் தேதி­யன்று எஸ்பி, டிஎஸ்­பி, ஏடி­எஸ்­பிக்க­ளுக்­கான இறுதிப் போட்டிகளில் மொத்தம் 25 காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிஸ்டல், ரிவால்வர் மற்றும் இன்சாஸ் ஆகிய துப்­பாக்­கி வகைகள் இந்த போட்டியில் நடத்தப்பட்டன. இவ்விரண்டு பிரிவுகளிலும், பாதுகாப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் பணிபுரியும் டிஎஸ்பி துரைப்பாண்டியன், கார்த்திக் ஆகியோர் முறையே முதலாம் (தங்கம்) மற்றும் இரண்டாம் (வெள்ளி) இடத்தைப் பிடித்தனர். இதே பிரிவின் உள் வட்ட பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் டிஎஸ்பி பிரசன்னா மூன்றாம் (வெண்கலம்) இடத்தைப் பிடித்தார்.

மேலும், 21.09.2024-ம் நாளன்று, முதற்கட்டமாக ஏஎஸ்பி முதல் எஸ்­பி­க்கள் வரையிலான அதிகாரிகளுக்கு இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுள், தேனி மாவட்ட ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரன் முதலிடத்தையும் (தங்கம்), திருப்பூர் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் ஈரோடு எஸ்பி ஜவகர் மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர்.

அதே நாளில், இரண்டாம் கட்டமாக டிஐஜி முதல் ஏடி­ஜிபி வரையிலான அதிகாரிகளுக்கு இறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களில் ஏடி­ஜிபி அமல்ராஜ் முதல் (தங்கம்) இடத்தையும், ஐஜி அன்பு இரண்டாம் (வெள்ளி) இடத்தையும் மற்றும் சென்னை நகர போக்­கு­வ­ரத்து போலீஸ் கூடுதல் கமி­ஷனர் ஐஜி சுதாகர் மூன்றாம் (வெண்கலம்) இடத்தையும் பெற்றனர். மேலும், துப்­பாக்கி சுடும் போட்­டியின் ஒட்­டு­மொத்த சாம்­பியன் பட்டத்தை ஏடி­ஜிபி அமல்ராஜ் தட்­டிச்­சென்றார். வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு தமிழ்­நாடு சட்டம் ஒழுங்கு சங்கர் ஜிவால் வழங்கி கவு­ர­வித்­தார்.