சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
தாம்பரம் காவல் ஆணையரகத்துக்குட்பட்ட சோமங்கலத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 284 கிலோ குட்காவை .வாகன சோதனையின் போது போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தாம்பரம் மாநகரக் காவல் ஆணையாளர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரிலும், கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, தாம்பரம் துணைக்கமிஷனர் பவன்குமார் ரெட்டி மேற்பார்வையில் மணிமங்கலம் உதவிக்கமிஷனர் இளஞ்செழியன் சோமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் நிதீஷ்கண்ணா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இன்று 25.09.2024 காலையில் 6.30 மணியளவில் புதுநல்லூர் சோதனை சாவடி அருகில் தனிப்படையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுநல்லூரிலிருந்து சோமங்கலம் நோக்கி வந்த டி.என். 10-பிபி-9066 என் பதிவு எண்கொண்ட கிரேடா காரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காருக்குள் இருந்த 49.2 கிலோ ஹான்ஸ், 25.2 கிலோ கூல் லிப், விமல்- 133.5 கிலோ ஏ1 15.75 கிலோ ஸ்வாகத் கோல்டு 60.3 கிலோ, ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கடத்தி வந்த ராஜ்குமார் (27), கணேஷ் பாபு (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தார்கள். விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.