காவல் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவித் தொகை: தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்
காவல் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் உதவித்தொகையை தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் பணிபரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனையொட்டி கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி காவல் வாரிசுகள் மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல்துறையினரின் குழந்தைகளுக்கு காவலர் சேம நலநிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. காவல் வாரிசுகளுக்கு ரூ. 20 லட்சம் கல்வி உதவி ஊக்கத்தொகையை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாம்பரமர மாநகர கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.