தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ்: டிஜிபி சங்கர்ஜிவால் வழங்கினார்
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் சிறந்த பணிபுரியும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சிறந்த பணியாற்றிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் 60 பேருக்கு டிஜிபி சங்கர்ஜிவால் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.