லாக்அப் டெத் மரணம்: இதுதான் உண்மை நிலை – தமி­ழக காவல்­துறை விளக்­கம்

160
அது தொடர்­பாக காவல்­துறை சார்பில் வௌிவந்­துள்ள விளக்கம் பற்­றிய விவரம் வரு­மா­று:–
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 05 முதல் 16 ஆம் தேதிக்குள் 12 நாட்களில் 4 பேர் போலீஸ் காவலில் மரணம் – என்ன நடந்தது என்ற தலைப்பில் 02.05.2024 அன்று X வளை தளத்தில் தனியார் செய்தி நிறு­வனம் சார்பில் செய்தி வெளியானது.
அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள நான்கு சம்பவங்களில் மதுரை மாநகரம் மதிச்சியம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி கார்த்திக் (32) என்பவர் அக்காவல் நிலைய வழக்கு ஒன்றில் 02.04.2024 அன்று கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தவர் 03.04.2024 அன்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக அரசு இராஜாஜி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இரண்டு நாள் கழித்து 05.04.2024 அன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக GRH காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
10.04.2024 அன்று விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பாச்சாவடி பகுதியில் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபான பாட்டில்களை வைத்திருந்த ஏற்கனவே பல்வேறு சாராய வழக்குகளில் தொடர்புடைய  ராஜா (43) என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் வீட்டிற்கு சென்ற பின் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறியவரை அவரது மனைவி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
22.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணை கைதியாக இருந்த சிவகாசியை சேர்ந்த ஜெயகுமார் (60) என்பவர் காசநோய் காரணமாக 07.02.2024 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு சிறை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 15.04.2024 அன்று நள்ளிரவு தனக்கு மூச்சுத்திணறல் இருப்பதாக அவர் கூறியதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 16.04.2024 அதிகாலை சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் மேற்படி சம்பவத்திற்கு திருநெல்வேலி மாநகர் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணையில் உள்ளது.
கடந்த 13.04.2024 அன்று காலை ஆவடி மாநகர் செவ்வாய்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புட்லூர் அருகே இருந்த 7 சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் 2 கொலை 2 கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சாந்தகுமார் (30) என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரியவந்தது.
அவர்களிடமிருந்து ஒரு போலி துப்பாக்கி,  4 பட்டாக்கத்திகள்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக அவர்கள் மீது செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற சமயத்தில் மேற்படி சாந்தகுமார் திடீரென நெஞ்சு வலி உள்ளதாக கூறியவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவத்திற்கு செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.  மேற்படி நபரது பிரேதத்தை பரிசோதனை செய்த அரசு மருத்துவர் அவருக்கு 90% இதய அடைப்பு இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறிருக்க,  காவல்துறையை குறை கூரும் நோக்கத்தோடு மேற்கண்ட செய்தியானது வேண்டுமென்றே வெளியிடப்பட்டு பரப்பப்படுகிறது . இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.