மிக்ஜாம் புயல்: வெளியில் செல்வதை தவிருங்கள்: சென்னை நகர காவல்துறை வேண்டுகோள்

160

மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும்படி சென்னை நகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் சாலையில் செல்லும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
• வாகனங்களை🚘மெதுவாகவும் கவனமாகவும் ஓட்டவும்.
• வாகனங்களை ஓட்டும் போது, பிரேக்குகளை சரிபார்க்கவும்.
• தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் வாகனம் ஓட்ட வேண்டாம்.
• வாகனங்களின் வைப்பர்களைச் சரிபார்க்கவும்.
• வாகனங்களில் செல்லும் போது குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும். 🚘பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கவும்.
• வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
• மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.
பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
• வானிலை அறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் உடனுக்குடன் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும்.
• சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை கண்டு அச்சப்படாதீர்கள்.
• அவசர நிலைகளுக்கு தொலைபேசி எண்.100ஐ அழைக்கவும்.
• சென்னை பெருநகர காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் சேவை செய்ய 24 மணி நேரமும் தயாராக உள்ளனர்