அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, 38 என்பவர் கடந்த 03.08.2023 அன்று அதிகாலை, பிராட்வே பேருந்து நிலையம் அருகே செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பார்த்தசாரதியின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து பார்த்தசாரதி, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில் சம்பவ இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிர ஆய்வு செய்து, மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அமைந்தகரையைச் சேர்ந்த சுரேன் (எ) அப்பு, 23 என்பவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.