சென்னை, பெரியமேடு பகுதிகளில் 3 நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 957 கிராம் போதைப்பொருள் மற்றும் 5 கிலோ கஞ்சா பறிமுதல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

சென்னை, அமைந்தகரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (05.08.2023) மாலை, அமைந்தகரை, ஷெனாய்நகர் சிக்னல் அருகே கண்காணித்தனர். அங்கு இருசக்கர வாகனத்தில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் வைத்திருந்த எம்கேபி நகரைச் சேர்ந்த ஜமாலுதீன், 42, புளியந்தோப்பு இர்பான் அகமது, 23, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 கிராம் மெத்தம் பெட்டமைன், 17 கிராம் சூடோஎபிட்ரின், 900 கிராம் மென்தால் என மொத்தம் 957 கிராம் போதைப்பொருட்கள், 1 எடை இயந்திரம் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகே சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்துல் சஞ்சிப் 39 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.