சென்னை அண்ணாசாலையில் HAPPY STREET கொண்டாட்டம்

185

சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் HAPPY STREET என்ற நிகழ்ச்சியை கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்று காலையில் சென்னை அண்ணாசாலையில் நடந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை துவங்கி வைத்த சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர், துணைக்கமிஷனர் சமய்சிங் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.