தமிழர் பாரம்பரிய உடையில் ஆயுதப்படை போலீசாருடன் பொங்கல் கொண்டாடிய டிஜிபி சங்கர்ஜிவால்

188

சென்னை பரங்கிமலை காவல்துறை ஆயுதப்படை விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் விழா கொண்ட்டாடப்பட்டது. இதில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.

புனித தோமையார்மலை ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் குடும்பத்தினர் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தனது மனைவி மம்தாவுடனும், சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தனது மனைவி ஷில்பம் கபூருடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். கிராமிய ஆட்டமான கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அவற்றை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் குடும்பத்துடன் பொங்கல் விழாவில் ஆயுதப்படை காவலர்களின் பொங்கலிட்டதை கண்டு ரசித்தனர். அதன் பின் ரங்கோலிகளை பார்வையிட்ட டி.ஜி.பி சங்கர் ஜிவால் சிறப்பாக கோலமிட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெண்களுக்கான கயிறு இழுக்கும் போட்டி, உரியடிக்கும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான மயிலாட்டம், ஒயிட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் பரத நாட்டியம் ஆகிய நடன நிகழ்ச்சிகளை ஆயுதப்படை போலீசார் அரங்கேற்றியது அனைவரையும் கவர்ந்தது.

 

இதையடுத்து சென்னை காவல்துறையின் அதிரடிப்படையினர் கண்களை கட்டியபடி ஏகே 47 துப்பாக்கிகளை கழற்றி மாட்டும் நிகழ்வை நிகழ்த்தி காட்டியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.