ஆவடி காவல் ஆணையரகத்தில் களை கட்டிய சமத்துவ பொங்கல் விழா: மனைவியுடன் பங்கேற்ற டிஜிபி சங்கர்ஜிவால் மனைவி

175

ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று 14.01.2024 பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கல் விழாவாக டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் ஆவடி போலீஸ் கமிஷனர்

சங்கர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்திரனாக டிஜிபி சங்கர்ஜிவாலின் மனைவி மம்தா கலந்து கொண்டார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கரகாட்டம், தாரை தப்பட்டை உள்ளிட்ட கிராமிய

கலை நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரி ஆகியவை நடைபெற்றன. காவல் ஆளிநர்கள் பொங்கலிட்டதை டிஜிபி சங்கர்ஜிவால் அவரது மனைவியும் ரசித்து உண்டார்கள். மேலும் சைக்கிள் பந்தயம், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளை ரசித்த டிஜிபி

சங்கர்ஜிவால் காவல் குடும்பத்தினருக்கு கரும்பு மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். இந்த பொங்கல் விழாவில் ஆவடி காவல் ஆணையரக

தலைமையிட ஐஜி ராஜேந்திரன், ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், போக்குவரத்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.