­சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் லேப்டாப் திருடிச் சென்ற நபர் கைது. லேப்டாப் பறிமுதல்.

171

சென்னை, அமைந்தகரை, ரயில்வே காலனி 4வது தெருவில் உள்ள Opportunity Tower என்ற வணிக வளாகத்தில் ஒரு அழகு நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 27.12.2024 அன்று இரவு அழகு நிலையத்தை பூட்டிவிட்டு, மறுநாள் (28.12.2024) காலை அழகு நிலையத்தை திறந்து பார்த்தனர். அப்போது, யாரோ Air Condition பழுது பார்க்கும் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அழகு நிலையத்தில் வைத்திருந்த லேப்டாப்பை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து மேற்படி வணிக வளாகத்தின் கட்டிட மேற்பார்வையாளர் அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்­. அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்­தி­னர். போலீசார் விசாரணை நடத்தி இந்த திருட்டில் ஈடு­பட்­ட கீழ்­பாக்கம், புல்­லா­­புரம், 7வது தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து அழகு நிலையத்தில் திருடிச் சென்ற லேப்டாப் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய சிறிய இரும்பு ராடு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் 30.11.2024 அன்று நள்ளிரவு, அமைந்தகரை, பழைய நடராஜபுரம், அய்யாவு காலனியில் உள்ள வெல்டிங் கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து மின்சார உபகரணங்கள் திருடியது தொடர்பான K-3 அமைந்தகரை காவல் நிலைய வழக்கில் ஸ்ரீதர் சம்பந்தபட்டவர் என்பதும், இவர் மீது ஏற்கனவே அமைந்தகரை மற்றும் S-3 மீனம்பாக்கம் காவல் நிலையங்களில் 3 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ஸ்ரீதர் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.