வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் (27.12.2024) வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, கம்பெனி சத்திரம் தெரு சந்திப்பில் கண்காணித்தனர். அப்போது அங்கு சிலர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதயைடுத்து லாட்டரி சீட் விற்பனை செய்த வண்ணாரப்பேட்டை, இன்ஸ்பெர்க் சப்பராயுலு தெருவைச் சேர்ந்த ஜாகிர்பாஷா (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.20,600/-, 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரி ஜாகிர் பாஷா விசாரணைக்குப் பின்னர் 27.12.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.ூ
மேலும் ஜாகிர் பாஷா கொடுத்த தகவலின்பேரில், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நாராயணன்(53) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.4,000/-, 1 இருசக்கர வாகனம், 2 செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நாராயணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்