காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

241

ஆவடி காவல் மாவட்டத்தில் பருத்திப்பட்டு கீதா சிட்டாடல் திருமண மண்டபத்தில் 16.09.2023 அன்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் பொதுமக்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போக்குவரத்து சீரமைப்பு, வாகன நிறுத்தம் ஆக்கிரமிப்பு சரிசெய்தல், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது,

குடியிருப்போர் பாதுகாப்பு கருதி மாதந்தோறும் கலந்தாய்வு நடத்துவது, சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துதல், பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,

குற்றத் தடுப்பு நடவடிக்கையாக CCTV கேமரா அமைப்பது, மற்றும் குற்றச் செயல் நடக்கும் இடங்களில் போலீஸ் பூத் அமைத்து காவலர்களை பணியமர்த்துதல், போன்றவை தொடர்பாக இந்தக் கலந்தாய்வில் பொது மக்கள் சார்பாக தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையாயளர் உறுதி அளித்தார்.