தி.நகர் பகுதியில் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்களை போலீசார் கைது செய்து ஒரு பெண்ணை மீட்டுள்ளனர்.

சென்னை நகர விபச்சார தடுப்புப் பிரிவு-2 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (15.09.2023), தி.நகர், முத்துரங்கன் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கண்காணித்தபோது, அங்கு உள்ள அறையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி தங்கும் விடுதியில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ராயபுரத்தைச் சேர்ந்த காயத்ரி நான்சி, 25, திநகரைச் சேர்ந்த விக்னேஷ் புனிதவேல், 37 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (15.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.