நடிகர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

167

நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா குறித்து கன்னியத்தை குறைக்கும் வகையில் மிகவும் அநாகரிகமான முறையில் அவமானப்படுத்தி, பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் (X-Twitter) பரவியது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சென்னை பெருநகர காவல் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (21.11.2023) நடிகர் மன்சூர் அலிகான் மீது 354 (A), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.