குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 26 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: ஆவடி கமிஷனர் சங்கர் அதிரடி நடவடிக்கை

204

ஆவடி காவல் ஆணையரக எல்லையில் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த 2 எஸ்ஐக்கள் உள்பட 26 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

இன்று 21.11.2023 ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கூலிப், புகையிலை பொருட்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் ஒழிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இன்று நேரடியாக சென்று கடைகளில் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி கொடுத்தார். அப்போது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குட்கா வியாபாரிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக போதை பொருட்கள் விற்பனையில் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவல் ஆளிநர்களை கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.