2ஆம் நிலை காவலருக்கான எழுத்துத் தேர்வு: தூத்துக்குடியில் ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆலோசனை கூட்டம்

160

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் நேற்று சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான 2023ம் ஆண்டிற்கான எழுத்து தேர்வு 10.12.2023 அன்று நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 8 தேர்வு மையங்களில் 7077 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 1991 பெண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 9068 பேர் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் 7 டிஎஸ்பிக்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்கள் உட்பட 850 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

முன்னதாக எழுத்துத் தேர்வு குறித்து காவல் துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டி விதிமுறைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து ஏடிஎஸ்பி கார்த்திகேயன், சைபர் க்ரைம் ஏடிஎஸ்பிக்கள் உன்னிகிருஷ்ணன், டிஎஸ்பிக்கள் சுரேஷ், வசந்த்ராஜ், மாயவன், லோகேஸ்வரன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிவகங்கை மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பாலசிங்கம் மற்றும் ராஜபாளையம் 11வது பட்டாலியன் உதவி தளவாய் சரோஜா உட்பட காவல்துறையினர், மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர்கள், உட்பட அமைச்சுப்பணி அலுவலர்கள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.