தூத்துக்குடியில் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வு: ஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு

157

இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 2023ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் தேர்வு மையங்களுக்கு, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை தலைவர் திரு. ரூபேஷ் குமார் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2023ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு இன்று (10.12.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி, புனித பிரான்ஸிஸ் சேவியர் மேல்நிலை பள்ளி, புதுக்கோட்டை பெரியநாயகம் மேல்நிலைப் பள்ளி, மில்லர்புரம் விகாசா பள்ளி, புனித மேரியன்னை மகளிர் கல்லூரி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 8 தேர்வெழுதும் மையங்களில் இன்று நடைபெற்றது.

இதனையடுத்து தேர்வு எழுதும் மையங்களுக்கு இன்று (10.12.2023) சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வில் 9068 விண்ணப்பதாரர்களில் 6,065 ஆண்கள், 1,643 பெண்கள் என மொத்தம் 7,708 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வில் 1,012 ஆண் விண்ணப்பதாரர்களும் 348 பெண் விண்ணப்பதாரர்களும் என மொத்தம் 1,360 பேர் கலந்து கொள்ளவில்லை.