சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 11.08.2023 அன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல நிறுவனம் அவர்களது வாடிக்கையாளரின் Brand Promotionக்காக online மூலம் டெல்லியிலுள்ள AAD ADDDICT VK MEDIA என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வினய் என்பவரிடம் Umbrella (1800 units) Canopy (200 units) Order செய்து அதற்கான பணம் ரூ. 3,90,000- அனுப்பியுள்ளனர்.

ஆனால் அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் மீது கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 18.10.2023 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு) அறிவுரையின் பேரில், தெற்கு மண்டல இணைக்கமிஷனர் சிபி சக்ரவர்த்தி (பொறுப்பு கிழக்கு மண்டலம்) நேரடி மேற்பார்வையில் கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் விசாரணையில் புகார்தாரர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண் விவரங்கள் மற்றும் புகார்தாரரோடு குற்றவாளி பேசிய மொபைல் எண் விவரங்கள் ஆகியவற்றை பெறப்பட்டு இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் Gaziabad, உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில் தனிப்படை காவல் குழுவினர் உத்திரப்பிரதேசம் மாநிலத்திற்கு விரைந்து சென்று, அங்குள்ள Teela Mod (P.S.) காவல்துறையினரின் உதவியோடு மேற்படி வழக்கின் குற்றவாளிகளான வினய் சக்சேனா (28), அவரது மனைவி விந்தி (29) ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2023 அன்று கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இந்த மோசடி குற்றத்திற்கு பயன்படுத்திய 2 லேப்டாப்கள், 3 செல்போன்கள் மற்றும் இதர வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் உத்திரப்பிரதேச மாநிலம், Gaziabad, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய ஆணையுடன் நேற்று (04.11.2023) சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்குப்பிறகு கைது செய்யப்பட்ட இருவரும் இன்று (05.11.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.