பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் -4,03,200- லட்சம் மதிப்பிலான 4,128 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு மதுபானம் கடத்திவரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கு ரகசிய தகவல் வந்தது. அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ராதிகா மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்டம் செந்தூர் சந்திப்பு ரோடு அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து செந்தூர் சந்திப்பு ரோடு அருகே நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை மறித்த குழுவினர் அதற்குள் ஆய்வு செய்தனர். அப்போது உள்ளே பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கடத்தி வந்த பாண்டிச்சேரி, நிர்ணயம்பட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் (35), விழுப்புரம், வானூரைச் சேர்ந்த சூரியா (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4,128 பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்களை கைப்பற்றினர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொது மக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண் 10581 அல்லது CUG NO – மற்றும் 94981-10581 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களைப் பற்றி விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என அமலாக்கப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.