பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகைப் பயிற்சி: பல்வேறு துறைகளுடன் போலீஸ் கமிஷனர் கலந்தாய்வு

195

சென்னை நகரில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தேசியப் பாதுகாப்புப்படையினரின் ஒத்திகைப் பயிற்சி குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

  தேசிய பாதுகாப்புப்படை (National Security Guard) சென்னையில் 15.09.2023 முதல் 17.09.2023 வரை பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV- V என்ற ஒத்திகை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் டேபிள் டாப் பயிற்சி என்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, இதில் NSG மற்றும் பிற துறைகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இந்தக் கலந்தாய்வு குறித்து எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Sl.No Departments

1.உள்துறை

2.வருவாய் நிர்வாகம்

3.பொதுத்துறை

4.மத்திய நுண்ணறிவுப்பிரிவு

5.பெருநகர சென்னை மாநகராட்சி

6.சென்னை துறைமுக ஆணையம்

7.தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்

8.கடலோர பாதுகாப்பு குழு

9.மாவட்ட ஆட்சியர், சென்னை

10.ரயில்வே

11.பொதுப்பணித்துறை

12.சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம்

13.சென்னை விமான நிலையம்

14.இந்திய ரிசர்வ் வங்கி

15. இந்து சமய அறநிலையத் துறை

16. ONGC

17. Classic Mall Development Company Ltd., Phoneix Mall

18. ஐடிசி கிராண்ட் சோழா

19. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

20. தமிழ்நாடு மின்சார வாரியம்

21. சென்னை மெட்ரோ நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்

22. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை

23. சென்னை பெருநகர போக்குவரத்து கழகம்

24. சென்னை பெருநகர காவல்

25. TNCF

26. SDRF

27. CISF

28. NSG

இந்தக் கூட்டத்தில் தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஸ்ராகார்க் மற்றும் கிழக்குச் சென்னை இணைக்கமிஷனர் திஷா மிட்டல், தென்சென்னை இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.