66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.

66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (11.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 9 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 3 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்பட சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்பி பாலாஜி சரவணன் ரோந்து மேற்கொண்டு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான சூரங்குடி மற்றும் சென்னமரெட்டிபட்டி சோதனை சாவடிகள் உட்பட பல பகுதிகளுக்கு நேரில் சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின்போது டிஎஸ்பிக்கள் சம்பத், ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம் சப்டிவிஷன்) புதூர் இன்ஸ்பெக்டர் அனிதா, குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.