சென்னை, கிண்டி,- வேளச்சேரியில் உள்ளது குருநானக் கல்லூரி. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கு 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரிய ஆள் என்கிற ரீதியில் மோதல் நீடித்து வந்துள்ளது. அடிக்கடி இரு வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே இந்த சண்டை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று கல்லூரியில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பு மாணவர்கள் பட்டாசு வெடியை வெடிக்க செய்ததாக சொல்லப்படுகிறது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் கல்லூரியில் மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
இந்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். இந்தச் சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரச்சினையில் ஈடுபட்ட 18 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளனர்.