வேளச்சேரி கல்லூரியில் வீசப்பட்டது வெடிகுண்டு அல்ல: வெறும் பட்டாசுதான்: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி
சென்னை, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் இன்று காலையில் திடீரென இரு மாணவர்கள் கும்பலுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. 3ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் சிலருக்குள் யார் பெரிய ஆள் என்கிற ரீதியில் மோதலில் மாணவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறுகையில், ‘‘கல்லூரியில் இரண்டு கோஷ்டியினரிடையே நடந்த தகராறில் பயம் ஏற்படுத்துவதற்காக இரண்டு மாணவகர்கள் பட்டாசை கொளுத்தி போட்டு விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். அவர்களில் ஒருவரை கல்லூரி செக்யூரிட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார். அந்த மாணவரை கைது செய்துள்ளோம்.

மற்றொரு மாணவர் தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு என பல ஊடகங்களில் தவறான செய்திகள் பதிவு செய்துள்ளனர். வீசப்பட்டது நாட்டு வெடிகுண்டு அல்ல. அது திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிதான். கல்லூரிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை நகரில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். கிரிமினல் நடவடிக்கைகள் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.’’ இவ்வாறு பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்தார்.
பிரேம் ஆனந்த் சின்கா பேட்டி ஆடியேோ