அரசியலுக்காக பிரமாண்ட இயக்குநருடன் இணையும் விஜய்

176

அரசியலில் குதிக்கப் போகிறேன் என நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதற்கான செயல்பாடுகளில் அவர் ஆர்வம் காட்டுவது அரசியலுக்கு அவர் வந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நேற்று 234 தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்க பொருளாளர்களை அழைத்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அரசியலில் இறங்கிய பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியதாக தகவல் வெளிவந்தது. லியோவுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். அதற்கு அடுத்து யாருடைய இயக்க விஜய் நடிக்க போகிறார் என இதுவரை தகவல் எதுவும் வெளிவராத சூழலில் இன்னொரு சுவாரஷ்ய தகவலும் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தின் கதையை சமீபத்தில் சங்கர் விஜய்யிடம் கூறி ஓகே செய்துவிட்டாராம் இயக்குனர் ஷங்கர்.