சென்னை, மாங்காட்டில் வீட்டின் மீது கம்பி வைத்த போது இரும்பு கம்பி மின்சார வயரில் உரசியதில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உடல் கருகினர்.
சென்னை, மாங்காடு, பாலாஜி அம்பாள் நகர் 8வது தெருவில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் முதல் தளத்தில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.இதில் 2 பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரும்பு கம்பியை மேலே எடுத்த போது அங்கு சென்று கொண்டிருந்த உயிர் அழுத்த மின்சார வயரின் மீது இரும்பு கம்பி பட்டதில் இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி கதறி துடித்தனர். அங்கு இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயர் அழுத்த மின்சார கம்பி மேலே சென்று கொண்டிருப்பது தெரிந்தும் அதன் அருகிலேயே வீடு கட்டும் பனி நடந்ததால் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விபத்தில் விக்னேஷ் உள்ளிட்ட இருவர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.