காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்களின் வருடாந்திர கவாந்து நிறைவு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் 15 நாட்கள் வருடாந்திர கூட்டு கவாத்து பணி நிறைவு விழா மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி, காவல் உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 600 பேர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் கடந்த 15 நாட்களாக கடுமையான வருடாந்திர கூட்டு கவாத்து பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த பயிற்சியின் நிறைவு நாளான நேற்று 28.01.2024-ம் தேதி
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம், ஏடிஎஸ்பிக்கள் சார்லஸ் சாம் ராஜதுரை, வெள்ளத்துரை மற்றும் காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் என மொத்தம் 600 பேர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவலர்கள் சிலம்பாட்டம்,
கராத்தே, பாடல்கள், மிமிக்ரி போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக ஆயுதப்படை காவலர்களுக்கு பெருவிருந்து (படாகானா) அளித்து ஆயுதப்படை காவலர்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி எஸ்பி சண்முகம் விழாவினை சிறப்பித்தார். விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த அதிகாரிகளை காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி வெகுமாக பாராட்டினர்.