தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் பைக்கில் வீலிங் செய்து இணையத்தில் பரப்பிய இருவரை போலீசார் உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இரண்டு வாலிபர்கள் ரோட்டில் பைக்கில் சென்று வீலிங் செய்து அதனை இணையத்தில் பரவ விட்டனர். அது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அது தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதனையடுத்து பிரையன் நகரைச் சேர்ந்த ரவிக்குமாரின் மகன்


பிரவீன்ராஜ் (வயது 19) என்பவர் தூத்துக்குடி பீச் ரோட்டிலும், பரமன்குறிச்சி அரங்கன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் டைட்டஸ் டேனியல் (20) என்பவர் திருச்செந்தூர் பகுதியிலும் பைக்கில் வீலிங் செய்தது தெரியவந்தது. அதனையடுத்து தூத்துக்குடி, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீச் ரோட்டில் பைக்கில் சாகசம் செய்த பிரவீன்ராஜ் மீது இன்ஸ்பெக்டர் ராஜாராம் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தார். பிரவீன்ராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்செந்தூர் பகுதியில் பைக்கில் வீலிங் செய்த டைட்டஸ் டேனியசை இன்ஸ்பெக்டர் கிறித்துராஜ் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தார். இருவர் மீதும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துதல் மற்றும் மோட்டார் வாகன சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.