டில்லியில் நடந்த அகில இந்திய காவல்துறை தடகள போட்டியில் தங்கம் உள்பட 12 பதக்கங்களை வென்ற தமிழக காவல்துறையினரை டிஜிபி சங்கர்ஜிவால் பாராட்டினார்.
73-வது அகில இந்திய காவல்துறை தடகள குழு போட்டிகள் கடந்த 10.11.2024 முதல் 14.11.2024 வரை புது டில்லியில் டில்லி காவல்துறையால் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு
காவல்துறை தடகள மற்றும் சைக்கிள் அணியைச் சேர்ந்த 76 வீரர்கள் 3 -தங்கம், 4 வெள்ளி, 5- வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.