52 புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட எஸ்பி பாலாஜி சரவணன்

165

தூத்துக்குடி மாவட்டத்தில் 52 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (15.11.2023) எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 2 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 50 மனுதாரர்கள் என மொத்தம் 52 மனுதாரர்கள் தங்கள் குறைகளை எஸ்பி பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி பாலாஜி சரவணன் உடனடியாக அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.