தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று (14.11.2023) முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லிஅரசன் மற்றும் போலீசார் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் பல்க் ஜங்ஷன் பகுதியில் பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்தம் நகர் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3745 ‘மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு கூட்டங்கள் காவல் துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,17,881 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.