தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று (10.01.2024) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 4 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 25 மனுதாரர்கள் என மொத்தம் 29 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். அவற்றை நேரில் பெற்று குறைகளை கேட்டறிந்த மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் அந்த புகார்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.