தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பசுபதிபாண்டியன் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலங்காரத்தட்டில் இன்று (10.01.2024) பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் 12வது ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்துப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போலீசாரின் பாதுகாப்பு பணிகளை எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் சென்று கண்காணித்தார்.