பெட்ரோல் குண்டு வீச்சு: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கவர்னரை சந்தித்து நேரில் விளக்கம்

173

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த தேனாம்பேட்டை ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்தனர். முதல் கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென்சென்னை இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி, அடையாறு துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார் ஆகியோர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து நேற்று விளக்கம் அளித்திருந்தனர்.