பள்ளி மாணவர்களுக்கான போதைத் தடுப்புக்குழு அமைப்பு: பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் கமிஷனர் சங்கர் ஆலோசனை
இன்று 12.12.2023 ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தலைமையில் காவல் உயர் அதிகாரிகள், திருவள்ளுர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (CEO) மற்றும் மாவட்ட
கல்வி அதிகாரி (DEO) ஆகியோருடன் அரசினர் மற்றும் தனியார் பள்ளிகளில் உயர்நிலை வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குகான போதை தடுப்பு குழுவினை (ANTI DRUG COMMITTEE) அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆவடி இணைக்கமிஷனர் டாக்டர் விஜயகுமார், துணைக்கமிஷனர் அய்மன் ஜமால் ஆகியோர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.