ஆன்லைன் மூலம் மின்­­சார வாகன விநி­யோ­கஸ்தர் உரிமம் பெற்றுத் தரு­வ­தாக ரூ. 4 கோடி மோசடி செய்த நபரை 3 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் கைது செய்த மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீஸ்

160

இணையதளம் மூலம் மின்சார வாகன விநியோகஸ்தர் உரிமம் பெற்று தருவதாக கூறி 30 நபர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்து தலைமறைவாக இருந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­­­பி­ரிவு போலீசார் கைது செய்­தனர்.

முருகன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்­தீப்ராய் ரத்­தோ­ரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், அவர் கூறி­யி­ருந்­த­தா­வது, ”நான் இணையதளம் விளம்பரத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு OITA E-Bikes என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் எனக்கு அறி­மு­க­மானார். மின்சார இருசக்கர வாகனம் வாங்கி, விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கு அவர் ஆசை வார்த்தை காட்­டி­யதன் பேரில் ரூ 12 லட்சம் கொடுத்தேன். இதே போல் ராஜேந்­தி­ரன் மின்சார இரு சக்கரவாகனம் தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களிடம் விற்பனை உரிமம் செய்து தருவதாக கூறி 30 நபர்களிடம் சுமார் ரூ. 4 கோடி பணம் பெற்றார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டு ராஜேந்­திரன் விற்­பனை .உரிமம் பெற்­றுத்­த­ரா­மலும், காமலும் பணத்தை திரும்ப செலுத்தாமலும், ராஜேந்திரன் சைதாப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தை மூடிவிட்டு 2021ம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”” என தெரி­வித்­தி­ருந்­தார்.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப்பிரிவு -1ல் (EDF-1), வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அத­னை­ய­டுத்து தலை­ம­றை­வான ராஜேந்­தி­ரனை கைது செய்­­யும்­படி கமி­ஷனர் சந்­தீப்ராய் ரத்தோர் உத்­த­ரவின் படி சென்னை மத்தியக் குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் P.K. செந்தில்குமாரி ஆலோசனையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் நிஷா, மேற்பார்வையில் கூடுதல் துணை காவல் ஆணையாளர் முத்துவேல்பாண்டி அறிவுரையின்பேரில், மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவண மோசடி பிரிவு -1 (EDF-1), உதவி ஆணையாளர் ஜான்விக்டர் தலைமையில், காவல் ஆய்வாளர் திரு.R.தங்கராஜூ, உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை 2021 ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த தஞ்­சாவூர், பாப­நா­சத்தைச் சேர்ந்த ராஜேந்திரனை (வயது 52) மாமல்லபுரம் அருகில் 23.04.2024-ம் தேதி கைது செய்தனர். ராஜேந்திரன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.