நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி: காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆயுதப்படை வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட காவலர் நலன் சிற்றுண்டி விடுதி, புதுப்பிக்கப்பட்ட சாலை மற்றும் காவல்துறை பொருட்கள் வைக்கும் வைப்பறையை திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல், புதுப்பேட்டையில் இயங்கி வரும் ஆயுதப்படை-1 வளாகத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், காவலர் நலன் சிற்றுண்டி விடுதி புதுப்பிக்கப்பட்டும், புதிதாக சாலை அமைக்கப்பட்டும், காவல்துறை வைப்பறை கட்டப்பட்டுள்ளது.
